திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம்.. எப்போது திறப்பு.?

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியின் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படுகில் பயணம் செய்து பார்வையிட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து, கடல் சீற்றம் காரணமாக சில நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், இவ்விரு இடங்களையும் இணைக்கும் வகையில் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை  ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி இந்த கண்ணாடி இழை கூண்டு பாலம் 115 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும் நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும்.

இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் நினைக்கும் கடல் சார் பாதசாரிகள் பலத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரும் 2024 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.