திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய மகன் ரிஷி(15) எண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் பெற்றோர், ரிஷியை ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளனர். மேலும் உறவினர்களும் ரிஷியிடம் படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த ரிஷி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று குளியல் அறையில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ரிஷியின் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.