நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம் : ஏஸ்பியைத் திரும்ப கேட்டு மற்றொரு தரப்பினர் ஆதரவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகார் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் படி, உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலம் விசாரணை செய்து வந்தார். இதற்கிடையே பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதன் படி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட   பல்பீர் சிங்கிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, அம்பை பகுதியின் ஏஸ்பியாக பல்வீர் சிங் பொறுப்பேற்றது முதல் எங்கள் பகுதிகளில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன. இளைஞர்களிடையே கஞ்சா பழக்கமும் இல்லை” என்று தெரிவித்தனர். 

இதற்கிடையே அம்பை அருகே உள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர் ஒன்றை அடித்துள்ளனர். அந்த பேனரில், தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் இளைஞர்கள் சிலர் பல்பீர் சிங் தொடர்ந்து பணியில் அமர வேண்டும் என்று, அம்மன் பாதத்தில் ஏஸ்பி-யின் புகைப்படத்தை வைத்து எடுத்தனர். தமிழகமே எதிராக செயல்பட்ட ஏஎஸ்பி-க்கு ஆதரவு தரும் வகையில் சில வீடியோக்கள் சமூக வலைதலங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.