பத்து வழி சாலை உதவும்
கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் 224 தொகுதியிலும், தகுதியான வேட்பாளர் நிறுத்தப்படுவர். யார் போட்டியிடுவர் என்பது குறித்து, மேலிடம் முடிவு எடுக்கும். பெங்களூரு – மைசூரு பத்து வழி சாலையால், பழைய மைசூரில் பா.ஜ., அதிக இடங்களில், வெற்றி பெறும். தேர்தலுக்கு முன்பு இந்த சாலையை திறக்க இரவு, பகலாக, கடுமையாக உழைத்து உள்ளேன். என் உழைப்பு வீண் ஆகாது என்ற, நம்பிக்கை உள்ளது.
பிரதாப் சிம்ஹா,
பா.ஜ., – எம்.பி., மைசூரு லோக்சபா தொகுதி
பா.ஜ.,வின் கலாசாரம்
காங்கிரஸ் பல்வேறு கலாசாரம், கொண்ட கட்சி. பா.ஜ.,வில் என்ன கலாசாரம் உள்ளது. சிடி, லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது இது தான், பா.ஜ.,வின் கலாசாரம். ராகுல் மேற்கொண்ட, பாரத் ஜோடோ யாத்திரையால் பா.ஜ.,வுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவை ஒழித்து கட்டுவது தான், பா.ஜ.,வின் நோக்கம். அப்படி செய்ய, காங்கிரஸ் ஒரு போதும் விடாது.
சீனிவாஸ்,
தேசிய இளைஞர் காங்., தலைவர்
இருவரும் முதல்வர் ஆவர்
கோலார், வருணா தொகுதிகளில், சித்தராமையா போட்டியிடுவது 100 க்கு 100 சதவீதம் உண்மை. இரு தொகுதிகளில் போட்டியிட, மேலிடம் அவருக்கு வாய்ப்பு அளிக்கும். சிவகுமார், சித்தராமையா இருவரும், முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள். அவர்கள் நிச்சயம் முதல்வர் ஆவர். கோலாரில் போட்டியிடும் சித்தராமையாவை, வெற்றி பெற வைப்பது எங்கள் கடமை.
நாராயணசாமி,
காங்., எம்.எல்.ஏ., பங்கார்பேட்
ஜனநாயக கடமை
கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஏதாவது ஒரு கட்சி வெற்றி, பெற வேண்டும். ஓட்டு போட தகுதியான, அனைவரும் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள். ஓட்டு போடுவது நமது, ஜனநாயக கடமை. அதை யாரும் மறக்க கூடாது. தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும், நல்லது நடக்கட்டும் என்று வேண்டி கொள்கிறேன்.
சிவராஜ்குமார்,
கன்னட நடிகர்