புதுடெல்லி: பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக். இவர் நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஏப்.5 வரை இந்தியாவில் இருக்கும் அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.