போபால்: போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் 11வது வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். போபாலின் ராணி கமலாபதி-டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கிடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. 702 கி.மீ.பயணதூரத்தை 7.30 மணி நேரத்தில் கடக்கும் வந்தேபாரத் ரயிலின் அதிகபட்சவேகம் மணிக்கு 160 கி.மீ. பயணிக்கும்.
