திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவிகளிடம் முறைதவறி நடந்துக்கொண்டதாக அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த முருகன், மாணவிகளின் தலையில் ஜாமண்டரிபாக்சினால் தட்டுவது, பக்கத்தில் சென்று நிற்பது, உரசுவது போன்ற சில்மிஷத்தில் ஈடுபடுவது குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர் செய்யாறு போலீசில் அளித்த தகவலின் பேரில் போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், ஆசிரியரை சிறையில் அடைத்தனர்.