மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு பயிலும் மாணவிகளை சாதி ரீதியாக ஒருமையில் விமர்சிப்பதாகவும், தரக்குறைவாகப் பேசி வருவதாகவும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி பாரதி என்பவர் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், பேராசிரியர் சண்முகராஜா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.