மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் மட்டுமே இனைக்கபட்டு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்பதிவு செய்தாலும் மாத கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது, அத்துடன் இனி கோடை சீசன் என்பதால் அதிக சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் பயணித்து உதகை செல்ல ஆர்வம் காட்டுவர். எனவே  பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கோடை சீசனுக்காக பிப்பிரவரி 14 முதல் சிறப்பு மலை ரயில் சேவையை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை கோடை சீசனை ஒட்டி வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி சனிக்கிழமை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்தும் ஞாயிற்று கிழமை உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் என்ற அடிப்படையில் வாரத்தில் இரு தினங்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  இது கோடை சீசனுக்கான அறிவிப்பாக இருந்தாலும் வாரத்தில் இரு தினங்களுக்கு என்பதை வாரம் முழுவதும் இயக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.