மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம்: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது. சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகித மாற்றம் குறித்த தகவலை அளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை, “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற திட்டங்களுக்கு இப்போது அதிக வட்டி கிடைக்கும்.” என்று கூறினார்.

சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளதா?  சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிபிஎஃப் -க்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும்

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், அரசாங்கம் வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதாவது, பிபிஎஃப் -இல் முன்னர் கிடைத்துவந்த அதே பலன்கள் கிடைக்கும். தொடர்ச்சியாக 12 ஆவது காலாண்டாக பிபிஎஃப் மீதான வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் அரசு பலன் அளிக்கும்.

எந்த முதலீட்டுத் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

1. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
2. தேசிய சேமிப்புச் சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
3. செல்வமகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
4. கிசான் விகாஸ் பத்ரவில் 7.2 (120 மாதங்கள்) இலிருந்து 7.5 (115 மாதங்கள்) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்

குறைந்தபட்சம் 1 வருடத்தில் பிபிஎஃப்-ல் ரூ.500 வரை முதலீடு செய்யலாம். நீங்கள் 1 வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை பிபிஎஃப் -இல் டெபாசிட் செய்தால், அதில் வரி விலக்கின் பலனைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு மாதமும் அதில் ஒரு தொகையை டெபாசிட் செய்யலாம்

முதலீடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைகிறது

இந்தத் திட்டத்தில் முதலீடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்படும். ஆனால் நீங்கள் இதில் அதிக முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், அப்போது நீங்கள் வருடத்திற்கு ஒரு முறைதான் பணத்தை எடுக்க முடியும். 

கடன் கிடைக்கிறது

மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியின் பலனை உங்களுக்கு வழங்குகிறது. பிபிஎஃப் கணக்கில் நீங்கள் எளிதாக கடன் பெறலாம். உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 25% மட்டுமே கடனாகப் பெறு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.