வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.
இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷ்யாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுப்போம்.
உக்ரைன் பிரச்னை காலங்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பித்துள்ளோம். இதற்கு பின்னால், எங்களால் பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. உக்ரைனுக்கு போருக்கு உதவி வரும் நாடு மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். இதனை இந்த உலகம் மறக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement