ஆபத்தான காமிகேஸ் ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்காக உக்ரைனின் இளம் போர் வீரர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர்.
உயிர்களை பணயம் வைக்கும் இளம் வீரர்கள்
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலில், ரஷ்ய படைகளின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் ஆபத்தான காமிகேஸ் ட்ரோன்களை இளம் உக்ரைனிய வீரர்கள் தயார் செய்து வருகின்றனர்.
இதற்காக தங்கள் உயிர்களை கூட தியாகம் செய்ய இளம் உக்ரைனிய வீரர்கள் தயாராக உள்ளனர்.
US Army AMRDEC Public Affairs
ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியின் பிரத்யேக பேட்டிக்காக, போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனிய நகருக்கு சென்ற செய்தியாளர்கள், ஆபத்தான காமிகேஸ் ட்ரோன்களை தயாரிக்கும் இளம் உக்ரைனிய வீரர்களை கண்டனர்.
அங்கு அந்த இளம் உக்ரைனிய வீரர்கள், ட்ரோன்களின் மென்பொருள் செயல்பாட்டு திறனை மாற்றுதல் மற்றும் ட்ரோன்களில் ஆபத்தான வெடிமருந்துகள் சேர்த்தல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
sky news
ரகசியமான இடத்தில் சுமார் 18 முதல் 23 வயதுடைய நான்கு பேர் கொண்ட இளம் குழு இந்த பணியை செய்து வருகின்றனர், இவர்களால் மறு வடிவமைக்கப்படும் இந்த ட்ரோன்கள் பக்முத் நகரின் முன்வரிசையில் 10 முதல் 15 கி மீ உள் சென்று, ரஷ்ய படைகளின் மீதான தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படுகின்றன.
இளம் வயது கமெண்டர்
இந்த குழுவின் கமெண்டராக 23 வயதே ஆன அன்னா என்ற இளம் பெண் செயல்பட்டு வருகிறார். தளவாட நிபுணரான அன்னாவின் கீழ் மூன்று இளம் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
sky news
இது குறித்து அன்னா வழங்கிய தகவலில், நான் தான் மிகவும் இளம் வயது கமெண்டர், எனக்கு போர் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு தான் திருமணம் நடைபெற்றது.
எனது கணவர் முன்வரிசையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி கொண்டு வருகிறார், நாங்கள் எங்களது உரிமைக்காக, சுதந்திரத்திற்காக, கலாச்சாரத்திற்காக, எங்கள் மக்களுக்காக ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி கொண்டு வருகிறோம்.
sky news
இந்த போர் எப்போது முடிகிறதோ, அப்போது ரஷ்யாவுடனான ஒட்டுமொத்த மோதலுக்கும் முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று அன்னா தெரிவித்துள்ளார்.
skynews