வட கொரியாவில் உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பை அகற்றப்படுவதாக தென் கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா- வட கொரியா பதற்றம்
கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து அமெரிக்கா-தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் பிரம்மாண்டமான போர் பயிற்சியை அவ்வப்போது நடத்தி வருகிறது.
இந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் போரை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் என்று வட கொரியாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
Reuters
மனித உரிமை மீறல்
இந்நிலையில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென் கொரியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக வட கொரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
Reuters
அதில் சிறுவர்களுக்கு மரண தண்டனை, 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை போன்ற கொடுமையான மனித உரிமை மீறல் அரங்கேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பை அகற்ற படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.