மத்திய பிரதேசத்தின் போபால் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 11வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர்களையும் சந்தித்து பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் திறமை, திறன் மற்றும் நம்பிக்கையை வந்தே பாரத் ரயில் வெளிப்படுத்துவதாக கூறினார்.
மேலும், வந்தே பாரத் ரயில்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டவையாகவும், தூய்மையாகவும் இருப்பதுடன், சரியான நேரத்தில் நிலையங்களை அடைவதாகவும் கூறினார்.
வளரும் இந்தியாவின் எடுத்துக்காட்டாகவும் வந்தே பாரத் ரயில்கள் திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.