வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ கிராம் நெல் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ நெல், 14% ஈரப்பதனுக்கு குறைவாக உள்ள நெல் ஒரு கிலோ 100 ரூபாவிற்கும், 14% முதல் 22% ஈரப்பதம் உள்ள நெல் ஒரு கிலோ 88 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.
இவ்வாறு பெறப்பட்ட நெல் அரிசியாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சுமார் 37,715 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்ற அளவில் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.