மதுரை: வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காலச் சூழல் காரணமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் காளான்களாக உருவெடுத்துள்ளது. வாடகைத் தாய் சட்டங்கள் பற்றி நீதித்துறை அதிகாரிகள் முழுமையாக அறிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.