விஜய்சேதுபதி நடிக்கும் தமிழ் வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே இந்தி வெப் சீரியில் நடித்துள்ள விஜய்சேதுபதி தமிழில் நடிக்கும் வெப் சீரிஸ் இது.
7ஜி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த வெப் சீரிசுக்கு ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த வெப் சீரிஸ் டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்திற்காக தயாராகிறது. இந்த வெப் சீரிஸில் பங்கு பெறவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.