வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை படம் பார்க்க, பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். ஆனால் விடுதலை படத்துக்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் குழந்தையை படம் பார்க்க அனுமதிக்க திரையரங்க பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு, திரையரங்கிற்குள் படம் பார்க்க சென்றுவிட்டார். இதனால் செய்வதறியாது தவித்த ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள், படம் பார்க்க வந்த பெண்ணை குழந்தைகளுடன் வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஐநாக்ஸ் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் திரைப்படம் திரையிடுவது தாமதமானது. சென்னை ரோகிணி திரையரங்கில் நாடோடிப் பழங்குடியினருக்கு பத்து தல படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்கு மற்றொரு திரையரங்க சர்ச்சை வெடித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.