பெல்ஜியம் நாட்டில் கார் ஒன்று விபத்தில் சிக்கி 20 மீட்டர் தூரம் பறந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பிலமலே நகரில் உள்ள சாலை ஒன்றில் அதி வேகமாக சென்று கொண்டிருந்த மெர்சிடெஸ் பென்ஸ் கார் திடீர் என சுழன்று அடித்து காற்றில் பறந்தது.
5 மீட்டர் மேல் எழும்பிய இந்த கார் 20 மீட்டர் தூரத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் விழுந்தது. …
விபத்து நிகழ்வதற்கு சற்று முன்னர் மாணவர்கள் மைதானத்தில் விளையாடி விட்டு சென்றுள்ளனர். தூக்கி வீசப்பட்ட காரில் இருந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.