புதுடில்லி மனிதர்களை போலவே அனைத்து விலங்குகளுக்கும் சட்ட உரிமை உள்ளதாக அறிவிக்க கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
விலங்குகள் மீதான வன்கொடுமை நிகழ்வுகள் மிக தாமதமாக தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. விலங்குகளைப் பாதுகாக்க, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது.
எனவே, மனிதர்களை போலவே, விலங்குகளுக்கும் சட்ட உரிமை உள்ளதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘மனுதாரரின் கோரிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், அசாதாரண வரம்பில் இருப்பதால், உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Advertisement