ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் கைதான அதன் இயக்குனர்கள் ரவிச்சந்திரன், கலைச்செல்வி தம்பதி, மோசடி பணத்தில் சொகுசுக் கார்கள், ஏழு கோடி மதிப்பிலான நிலம் ஆகியவற்றை வாங்கி குவித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஹிஜாவு நிறுவனம் தொடர்பான வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அதன் இயக்குநர்களான ரவிசந்திரன் – கலைச்செல்வி தம்பதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹிஜாவு மோசடி பாணியில் அண்ணாநகரில் ஆர்.எம்.கே ப்ரோஸ் என்ற பெயரில் கிளை நிறுவனம் தொடங்கி சுமார் 300 கோடி வரை முதலீட்டாளர்களிடம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடி பணத்தில் பல கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளை அவர்கள் வாங்கியுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.