50 நாட்களை கடந்த டாடா
சின்னத்திரை நடிகரான கவின் லிப்ட் படத்தில் கிடைத்த வரவேற்பால் அடுத்து டாடா படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் கதாநாயகியாக அபரணா தாஸ் நடித்திருந்தார். புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியான பிறகும் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் 50 நாட்களை எட்டியுள்ளது. இதற்கு கவின் மற்றும் படக்குழுவினர்கள் நன்றி தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.