Actor Bala : அறுவை சிகிச்சையில் உயிர் கூட போகலாம்.. வீரம் பட நடிகரின் உருக்கமான பதிவு!

கொச்சி : இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலாவின் உருக்கமான வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கலங்கிப்போனார்கள்.

நடிகர் பாலா 2003 ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் சுமாராக ஓடினாலும், அந்த படத்தில் இடம் பெற்ற தவமிருந்து கிடைத்த வரமே பாடல் அனைவரும் பிடித்த பாடலாக மாறியது.

இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பாலா

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா 2016ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன் இருக்கும் நிலையில், அம்ருதாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, 2021ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் எலிசெபத் உதயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், இவருக்கு அண்மையில் கல்லீரல் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதையடுத்து, கடந்த வாரம் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இருமல் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

உயிர் கூட போகலாம்

உயிர் கூட போகலாம்

இந்நிலையில், நடிகர் பாலா தனது இரண்டாவது திருமண நாளை மருத்துவமனையிலேயே கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். மேலும், அந்த வீடியோவில், நான் மருத்துவமனையில் இருக்கிறேன், இன்னும் சில நாட்களில் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதில் எனக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது, பிழைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நிச்சயம் மீண்டு வருவேன் என்றார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

அப்போது உடன் இருந்த அவரது இரண்டாவது மனைவி எலிசபெத், இது எங்களின் இரண்டாவது திருமண நாளாகும். முதல் திருமண நாளில் நானும் இவரும் டான்ஸ் ஆடி கொண்டாடினோம். இந்த திருமண நாளில் டான்ஸ் இல்லை, எங்களின் மூன்றாவது திருமண நாளில் நிச்சயம் டான்ஸ் ஆடி கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று கவலைகளை மறைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் பேசி உள்ளார். பாலாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.