மும்பை: பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த சம்மருக்கு ரசிகர்களை ஜில் ஆக்கி உள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை அமீஷா பட்டேல் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு இந்தியில் வெளியான கஹோனா பியார் ஹை எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான அமீஷா பட்டேல் இந்த வயதிலும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.
காதலும் பிரேக்கப்பும்
சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் உடன் காதலில் விழுந்த நடிகை அமீஷா பட்டேல், 5 ஆண்டுகள் அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து விட்டு பின்னர் பிரேக்கப் செய்து பிரிந்தார். பாலிவுட் நடிகையாக வலம் வந்த அமீஷா பட்டேல், தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து
தமிழில் புதிய கீதை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் அமீஷா பட்டேல். மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடித்த அந்த படத்தில் வசியக்காரி பாடலுக்கு வசீகரமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதன் பின்னர் தமிழ் படங்களில் அமீஷா பட்டேல் ஆர்வம் காட்டவில்லை.
கவர்ச்சி குளியல்
47 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகை அமீஷா பட்டேல் இன்ஸ்டாகிராமில் இந்த வயதிலும் பிகினி உடைகளை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் செம ஹாட்டான வீடியோவை ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.
மினி பிகினியில்
பிங்க் மற்றும் டார்க் ரெட் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட கவர்ச்சி பிகினியில் நடிகை அமீஷா பட்டேல் ஆனந்த குளியல் போட்டு தனது சம்மர் ஹாலிடேவை கொண்டாடும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அமீஷா பட்டேலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
ஹாட்னஸின் அரசியே
அமீஷா பட்டேலை நீச்சல் குளத்தில் அந்த கோலத்தில் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் பலரும் ஹாட்னஸ் குயின் என கமெண்ட்டுகளை போட்டு அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சம்மர் வெப்பத்தை போக்க நாங்களும் உங்களுடன் சேர்ந்து குளிக்கலாமா என ரசிகர்கள் கோரிக்கைகளையும் எழுப்பி வருகின்றனர்.