சென்னை: சிவராஜ் குமாருக்கு கன்னடத்தில் ஆட்சியையே மாற்றும் அளவுக்கு மாஸ் உள்ளதாகவும் நடிகர் சிம்பு ஒரு டம்மி பீஸ் என ப்ளூ சட்டை மாறன் தனது பத்து தல விமர்சனத்தில் விமர்சித்துள்ளது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக வெளியாகி உள்ள பத்து தல படத்தை ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது விமர்சனத்தில் பந்தாடி உள்ளார்.
மைன்களை (சுரங்கங்கள்) எல்லாம் முதலில் மண்ணை அள்ளிப் போட்டு மூட வேண்டும் என விளாசி உள்ளார்.
வெறும் பில்டப் தல
சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பத்து தல படம் நல்ல படமாக இருக்கும் என நம்பிப் போய் தியேட்டரில் உட்கார்ந்தால், அந்த படத்தில் கடைசி வரை வெறும் பில்டப் மட்டுமே செய்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர். பத்து தல வெத்து தல என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பத்து தல படத்தை பந்தாடி உள்ளார்.
மைன்களை மண் அள்ளிப்போட்டு மூடணும்
கேஜிஎஃப் படத்தில் மைன்களை வைத்து கதை அமைந்த நிலையில், எல்லா இயக்குநர்களும் மைன்களை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றனர். வாரிசு, தசரா, பத்து தல என எல்லா படங்களிலுமே மைன் ஒரு முக்கிய கருவாக மாறி விட்டது என்றும் மைன்களை குண்டு வைத்து தகர்க்க முடியாது ஏற்கனவே குண்டு வைத்து வெடித்துத் தான் அதை உண்டாக்குறாங்க, வேணும்னா மண்ணை அள்ளிப் போட்டு மூடிடலாம். இல்லைன்னா நம்மள மண்ணை அள்ளிப் போட்டு மூடிடுவானுங்க போல என தனது பத்து தல விமர்சனத்தில் மைன்கள் தொடர்ந்து படங்களில் வந்து தொல்லைக் கொடுப்பதை கூறியுள்ளார்.
மொக்கை வில்லன்
இந்த படத்தில் கெளதம் மேனன் வில்லன் என்று யாராவது சொன்னால் தான் உண்டு என்பது போல மொக்கை வில்லனாகவே வருகிறார். துணை முதல்வர் என சொல்லிக் கொண்டு வரும் கெளதம் மேனன் கடைசியில் கிளைமேக்ஸில் அடியாட்களை வைத்துக் கொண்டு சிம்புவுடன் மோதும் காட்சிகள் எல்லாம் குபீரென சிரிப்பை வரவழைக்கின்றது என விமர்சித்துள்ளார்.
ஹீரோயின் எதுக்கு
மொக்கை வில்லனை போலவே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே இந்த படத்தில் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் வந்து போகிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்று சொல்ல முடியாது, வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என வெளுத்து வாங்கி உள்ளார்.
நல்லவரு வல்லவரு
சிஎம்மை முதல் சீனிலேயே கடத்திடுறாங்க அவர் உயிரோடு இருக்காரா, கொல்லப்பட்டாரா, அவரை கடத்தியது ஏஜிஆர் தான் என்பது தெரிந்தும் அவரை நெருங்க முடியாத நிலையில், கெளதம் கார்த்திக்கை அண்டர்கவராக அனுப்புகின்றனர். ஏஜிஆரை நெருங்கிய உடனே அவர் எவ்ளோ பெரிய வல்லவரு, நல்லவருன்னு கெளதம் கார்த்திக்கு தெரிய வந்ததும் அப்புறம் அவர் என்ன பண்ணுவாரு, அதே தான் கிளைமேக்ஸ் என டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.
டம்மி பீஸ்
கன்னடத்தில் இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். அங்கே உள்ள அரசியல் சூழலுக்கும் அவரது மாஸுக்கும் இந்த படம் வொர்க்கவுட் ஆனது. ஆனால், இங்கே சிம்பு யாரு இவரு ஒரு டம்மி பீஸ், இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வழக்கம் போல தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
சினம் கொண்ட சிம்பு ரசிகர்கள்
ப்ளூ சட்டை மாறன் நடிகர் சிம்புவை டம்மி பீஸ் என விமர்சித்த நிலையில், கடுப்பான சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல கழுவி ஊற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.