சென்னை : 2023ம் ஆண்டு பிறந்த மூன்று ஆண்டு மாதங்கள் உருண்டொடி விட்டன. இந்த ஆண்டு பாலிவுட்டிற்கு மறக்க முடியாத ஆண்டாகவே மாறி உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் எதுவும் வெளியாக நிலையில், ஜனவரி மாதம் 25ந் தேதி பதான் படம் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை வசூலித்தது.
மேலும், ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த தூ ஜூதி மைன் மக்கார், செல்ஃபி மற்றும் ஷெஹ்சாதா போன்ற முன்னணி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்து வெளியாக உள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஜவான் (ஜூன் 2)
ராஜா ராணி,மெர்சல்,தெறி,பிகில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்த அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். தமிழ்,தெலுங்கு,இந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் ஜூன் 2ந் தேதி வெளியாக உள்ளது இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஷாருக்கான் இப்படத்தில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆதிபுருஷ் (ஜூன் 16)
பாகுபலி படத்தில் நடித்ததை தொடர்ந்து, உலக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் நாயகனாக மாறிய பிரபாஸ் நடிப்பில், சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளனதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாக உள்ளது.
மைதான் ( ஜூன் 23)
அமித் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ் கன் நடித்துள்ள திரைப்படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்தின் பொற்காலமாக இருந்த (1952-1962) அடிப்படையாகக் கொண்டு கால்பந்து அணியின் பயிற்சியாளரும் மேலாளருமான சையத் அப்துல் ரஹீம் அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இதில் அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளராக சையத் அப்துல் ரஹீம், பிரியாமணி, ருத்ரனில் கோஷ் மற்றும் கஜராஜ் ராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 23ந் தேதி வெளியாக உள்ளது.
சத்யபிரேம் கி கதா (ஜூன் 29)
காதல் திரைப்படமான இப்படத்தை இயக்குநர் சமீர் வித்வான்ஸ் இயக்கி உள்ளார். நதியத்வாலா கிராண்ட்சன் புரொடக்ஷன்ஸ் மற்றும் நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 29ந் தேதி வெளியாக உ உள்ளது.