தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.
இதன்படி திண்டுக்கல்லை பிரித்து பழனி தலைமையில் புதிய மாவட்டம், தூத்துக்குடியை பிரித்து கோவில்பட்டி தலைமையில் புதிய மாவட்டம், தஞ்சையை பிரித்து கும்பகோணம் தலைமையில் புதிய மாவட்டம், உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.