பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு, சீனா 2 பில்லியன் டாலர்கள் வழங்கியிருக்கிறது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நேபாள பிரதமர் , பிரகாஷ் ஷரனை (Prakash Sharan) அடுத்த நிதியமைச்சராக நியமித்திருக்கிறார். இவர் முன்னதாக வெளியுறவுத் துறையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளிநாட்டுப் பயணங்களுக்காகத் தனியார் ஜெட் விமானங்களில் 500,000 டாலர்களுக்கு மேல் செலவு செய்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், எகிப்து, பாலி, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான இல்ஹான் ஓமர், சீன செயலியான TikTok-ஐ அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதற்காகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் 50 வயது பெண் ஒருவர், அந்த நாட்டுப் பிரதமரான இம்மானுவேல் மெக்ரானை ‘குப்பை’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
செனகல் நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள கோழிப் பண்ணையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கிருமியான H5N1 பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதாக உலக விலங்கு நல அமைப்பு (WOAH) தெரிவித்திருக்கிறது.
ஹிந்துபோபியாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலமாக ஜார்ஜியா மாறியிருக்கிறது.
கராச்சியில் ரமலான் உணவு வழங்கும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பாலியல் குற்றங்களுக்காக ரோமானியா சிறையிலிருந்த ஆண்ட்ரூ டேட் (Andrew Tate) அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
டேட்டா பாதுகாப்பை கருத்தில் கொண்டு ChatGPT-ஐ முதல்நாடாக தடை செய்திருக்கிறது இத்தாலி.