எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கடந்த 2008 பிறகு ஐபிஎல்-ல் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), கடந்த சீசனில் குஜராத் டைடன்ஸுக்கு (Gujarat Titans) எதிரான இரண்டு போட்டிகளிலும் தோற்று சொதப்பியது. தற்போது நேற்று நடந்த ஆட்டத்திலும் குஜராத்துக்கு எதிராக சிஎஸ்கே தோற்றது.
இம்ரான்கான் கோவம்
பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல்-ல் இந்தியா விளையாட அனுமதிக்காதது குறித்து தேச வீரர்கள் கவலைப்பட வேண்டாம் என்று உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு ஏன் தடை.?
கண் நோய்களை கண்டறியும் ஆப்; நவீன டெக்னாலஜியில் அசத்தும் இந்திய சிறுமி.!
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஒரு பகுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டத்தை அதிகரித்தன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல்-ல் விளையாட இந்தியா தடை விதித்தது.
BCCI-க்கு திமிர்
இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்-ல் அனுமதிக்காதது குறித்து டைம்ஸ் ரேடியோவிடம் பேசிய இம்ரான்கான், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல்லில் இடம்பெற அனுமதிக்காததன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் அராஜகத்தை காட்டுகிறது, இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது,” என்று இம்ரான் டைம்ஸ் ரேடியோவிடம் கூறினார்.
அணு ஆயுதங்களை களமிறக்கும் ரஷ்யா; மரண பீதியில் அமெரிக்கா.!
“பாகிஸ்தான் வீரர்களை (ஐபிஎல் விளையாட) இந்தியா அனுமதிக்கவில்லை என்றால், அது இருக்கட்டும். பாகிஸ்தான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்,” என்று அவர் மேலும் கூறினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் “நிறைய நிதியை” உருவாக்கும் திறனால் இப்போது ‘திமிர்பிடித்துவிட்டது’ என்றும் இம்ரான் கூறினார்.
கிரிக்கெட்டில் இந்தியா வல்லரசு
“பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு துரதிர்ஷ்டவசமானது. கிரிக்கெட் உலகில் இந்தியா இப்போது ஒரு வல்லரசாக நடந்து கொள்ளும் விதத்தில் நிறைய ஆணவங்கள் உள்ளன. ஏனென்றால், மற்ற எந்த நாட்டையும் விட அதிகமான நிதியை உருவாக்கும் திறன் காரணமாக, யாரை விளையாட வேண்டும், யாரை விளையாடக் கூடாது என்று ஒரு வல்லரசின் ஆணவமாக அவர்கள் இப்போது கட்டளையிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ”என்று இம்ரான் கூறினார்.