மும்பை: ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ப்ளாஸ் பஸ்டர் ஹிட்டானது.
அதனைத் தொடர்ந்து அவர் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வந்தார்.
இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவான் படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக்கான் – அட்லீ
ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பிரமமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஒராண்டாக நடைபெற்று வருகிறது. டைட்டில் வெளியிடும் போதே ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவான் ஷூட்டிங்
ஆனால், ஜவான் ஷூட்டிங்கை சொன்னபடி முடிக்காமல் அட்லீ லேட் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனால் ஜவான் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக அட்லீ மீது ஷாருக்கான் கோபம் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜவான் படத்தின் முழு படப்பிடிப்பையும் அட்லீ முடித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 2ம் தேதி ரிலீஸ்
அதேநேரம் ஷூட்டிங் முடித்துவிட்டாலும் கிராபிக்ஸ் ஒர்க் உட்பட போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் இனிதான் தொடங்க உள்ளதாம். இந்த வேலைகளும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஜவான் திரைப்படம் ஏற்கனவே சொன்னபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸாகி விடும் என கன்ஃபார்மாக சொல்லப்படுகிறது. அதேபோல், இதனை உறுதி செய்யும் விதமாக சீக்கிரமே ஜவான் டீசரும் வெளியாகவுள்ளதாம்.
விஜய்யுடன் போட்டியா?
ஒருவேளை போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தாமதமாகிவிட்டால், ஜவான் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதியை அட்லீ முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ஜவான் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதே தேதியில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ஜவான் படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்ட வேண்டும் என ஷாருக்கான் எதிர்பார்ப்பில் உள்ளாராம். முக்கியமாக பதானைத் தொடர்ந்து ஜவானும் ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் என ஷாருக்கான் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.