ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ரீலிசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை ‘ஜெய் பீம்’ புகழ். தா.செ. ஞானவேல் இயக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினியின் நியூ லுக் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் அண்ணன், தங்கை செண்டிமென்ட்டை மையமாக வைத்து பேமிலி டிராமாவாக வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ‘அண்ணாத்த’ படம் வசூலை குவித்தாலும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் ரஜினியின் அடுத்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து கோலாமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற பிளாக் காமெடி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இளம் இயக்குனருடன் ரஜினி காம்போவில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இந்தப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதனிடையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினியின் 171 வது படத்தை தா.செ. ஞானவேல் இயக்குகிறார். சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட இயக்குனருடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளது.
என் விரல்கள் தொடை வழியாக பயணம் செய்கின்றன: பிரபல நடிகையின் பதிவால் பரபரப்பு.!
இந்நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘மும்பையில் அப்பாவுடன். நீதா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழாவில். புது லுக் செம்ம தலைவா’ என பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா. அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Kannika Snehan: கன்னிகா சினேகன் வீட்டுக்கு வந்த புது உறவு: தீயாய் பரவும் வீடியோ.!
கிளீன் ஷேவில் மீசையுடன் ரஜினியின் நியூ லுக் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. லால் சலாம் அல்லது தலைவர் 171 படத்தின் ரஜினியின் லுக்காக இது இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.