எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகை சமந்தா உடல் நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாதென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளும் கஷ்டம் நிறைந்த ஆண்டுகளாக இருந்து வருகிறது.
RK Suresh: ஆருத்ரா கோல்டு மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு? தலைமறைவு?
விவாகரத்து2021ஆம் ஆண்டு தனது காதல் கணவரான நாக சைதன்யாவுடன் விவாகரத்தை அறிவித்தார் நடிகை சமந்தா. இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா, தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் சமந்தா.
Actor: வாரிசு நடிகையே கதி என கிடந்த ‘பல்க்’ நடிகர்!
மயோசிடிஸ்இதனை தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதனால் படுக்கையில் இருந்து எழக் கூட முடியாத அளவுக்கு கடுமையான வலி இருப்பதாக கூறி கலங்க வைத்தார். இருப்பினும் ஒப்பந்தமான படங்களில் நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
Viduthalai Review: ‘அவருக்கு’ தேசிய விருது காத்திருக்கிறது… விடுதலை படம் குறித்து பயில்வான் விமர்சனம்!
சாகுந்தலம்கடைசியாக சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியானது. தற்போது சாகுந்தலம் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதற்கான புரமோஷன்களில் பங்கேற்று வருகிறார் சமந்தா. அதன்படி வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருவது, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவது என இருந்து வருகிறார் நடிகை சமந்தா.
Shankar: ராம்சரண் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா!
நிர்பந்திக்க மாட்டேன்அந்த வகையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை சமந்தா, தான் கடுமையாக உழைப்பதாகவும் உழைப்பினால் கிடைக்கும் வெற்றிதான் தனக்கு வேண்டும் என்றும் சம்பள விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்து உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தருகிறோம் என்று சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் சம்பளத்துக்காக கெஞ்சக்கூடாது என்றும் கூறியுள்ளார். ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்ற பவானிஸ்ரீ!
போராடி வருகிறேன்தீவிர உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்று கூறியுள்ள நடிகை சமந்தா, தனக்கு ஏற்பட்டுள்ள உடல் நிலை பாதிப்பில் இருந்து மீள்வது கடினமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 3 மாதங்கள் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்ததாகவும் மீண்டும் பழைய நிலைக்கு வர போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Vijay: அங்கிள் வரமாட்டீங்களானு கேட்ட குழந்தை… உடனே வீடியோ காலில் வந்து கொஞ்சிய விஜய்!
ஓய்வு எடுக்க விரும்புகிறேன்’குஷி’, ‘சிட்டாடல்’ படங்களில் நடித்த பிறகு தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போவதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நல்லபடியாக மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் அதற்காகவே இந்த ஓய்வு என்றும் தெரிவித்துள்ள நடிகை சமந்தா நிச்சயம் மீண்டும் நடிக்க வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார்.
Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!
Samantha Ruth Prabhu