தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். வரலாற்று படமான இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Suriya: சண்டைன்னு சொன்னாங்க… மொத்த குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. கடந்த ஆண்டு நவ. 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிப்ரவரி 17ஆம் தேதியும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இம்மாதம் 14 ஆம் தேதி சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரமோஷன்களில் படக்குழு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்தும் பேசியுள்ளார்.
அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா!
யசோதா மற்றும் சாகுந்தலம் படப்பிடிப்பின் போது தனக்கு மயோசிடிஸ் பிரச்சனை இல்லை என்றும் பர்சனல் பிரச்சனைகள்தான் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் தனக்கு போராட்டம் நிறைந்ததாக இருந்தது என்றும் இருப்பினும் தன்னை ஒரு மனுஷியாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார் நடிகை சமந்தா. அந்த பாடலுக்கு ஆடும் வாய்ப்பு வந்த போது தன்னுடைய ஒவ்வொரு நலம் விரும்பிகளும், குடும்ப உறுப்பினர்களும் ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று அட்வைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Samantha: சினிமாவில் இருந்து ஒதுங்கும் சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆனால் அந்த ஐட்டம் பாடலுக்கு ஆடுவதில் தான் உறுதியாக இருந்ததாகவும் விவாகரத்து பெற்ற பிறகு அதே வீட்டில் உட்கார விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தான் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன் என்றும் சமந்தா உருக்கமாக கூறியுள்ளார்.
View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl)
இதனிடையே உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிகை சமந்தா சில நாட்கள் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், இதற்காக சினிமாவில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் சினிமாவில் நல்லபடியாக நடிக்கவே இந்த ஓய்வை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் சமந்தா. இதனைக் கேட்ட ரசிகர்கள் எப்படியோ சமந்தா நல்ல உடல் நலத்துடன் இருந்தால் சரி என கூறி வருகின்றனர்.