Shankar: ராம்சரண் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அந்த படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர்தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களில் முக்கியமானவர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, 2.o, ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
​ Viduthalai Review: ‘அவருக்கு’ தேசிய விருது காத்திருக்கிறது… விடுதலை படம் குறித்து பயில்வான் விமர்சனம்!​
கேம் சேஞ்சர்ஏராளமான படங்களை தயாரித்தும் உள்ளார் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 2.o படம் வெளியானது. அதன்பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஷங்கர் கமலின் இந்தியன் 2, தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளால் படு பிஸியாக உள்ளார் ஷங்கர்.
​ ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்ற பவானிஸ்ரீ!​
பெரிய பட்ஜெட்கடந்த சில நாட்களுக்கு முன்பு கேம் சேஞ்சர் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியானது.
கேம் சேஞ்சர் படத்தை விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூதான் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஆண்டில் கேம் சேஞ்சர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​ Vijay: அங்கிள் வரமாட்டீங்களானு கேட்ட குழந்தை… உடனே வீடியோ காலில் வந்து கொஞ்சிய விஜய்!​
ஷங்கர் சம்பளம்கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியலை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் படம் என தெரிகிறது. இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் ஷங்கருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!​
தெலுங்கு திரையுலகினர் வியப்புதமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் காஸ்ட்லி இயக்குநரான ஷங்கர் தெலுங்கு சினிமாவில் பெத்த சம்பளத்தை பெற்றுள்ளார். ஹீரோக்கள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் அதிக சம்பளத்தை பெற்று வருகிறார் இயக்குநர் சங்கர். தெலுங்கு சினிமாவில் இயக்குநர் ராஜமவுலிதான் அதிக சம்பளம் பெறுவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்கு பெற்றுள்ள சம்பளம் தெலுங்கு சினிமாக்காரர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
​ Viduthalai: ஹீரோவாக அப்ளாஸை அள்ளும் ‘விடுதலை’ சூரி.. திணறடிக்கும் க்ளிக்ஸ்!​
Director Shankar Salary

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.