சென்னை : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் வீடியோவில் செம க்யூட்டாக இருக்கும் தமன்னாவை பார்த்து ரசிகர்கள் மெழுகாக உருகி வருகின்றனர்.
நடிகை தமன்னா சினிமாவில் என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.
தமன்னாவுக்கு வயசு ஏற ஏறத்தான் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
நடிகை தமன்னா
சீனியர் நடிகையான தமன்னா தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு முன்பே சினிமாவில் என்ட்ரி கொடுத்த தமன்னாவுக்கு கிட்டத்தட்ட 18 வருடத்திற்கு பிறகு தான் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்பே கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
காதல் கிசுகிசு
மலையாளம், தமிழ், இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டில் செல்வதாகவும் இணையத்தில் வதந்தி பரவியது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா, நானும் விஜய் வர்மாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். தேவையில்லாத வதந்திகள் பரப்பாதீர்கள். ஒவ்வொருவருக்கும் இது குறித்து விளக்க அவசியமில்லை எனக்கு இல்லை என அதிரடியாக விளக்கம் கொடுத்து அனைவரின் வாயை அடைத்தார்.
குலாப் ஜாமுன்
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிவப்பு நிற ப்ராக்கில் சும்மா அட்டகாசமாக கேட் வாக் நடந்துள்ளார். இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊறவைத்த குலாப் ஜாமுன் மாதிரி இருக்கீங்க என்றும், உங்களுக்கு வயசு ஏற ஏறத்தான் அழகு கூடுது என்றும் பேன்ஸ் வர்ணித்து வருகின்றனர்.
கவர்ச்சி நடனம்
நடிகை தமன்னா நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானா பல ஹிட் பாடல்களுக்கு விதவிதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதில் ராஷ்மிகா டீசன்டாக வந்த நிலையில், தமன்னா எனிமி படத்தில் இடம் பெற்ற மனசோ இப்போ தந்தி அடிக்கிது பாடலுக்கு கிளாமரான உடையில் டான்ஸ் ஆடினார். இந்த வீடியோவை ரசிர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.