சென்னை : நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பரவி வரும் வதந்தி குறித்து நடிகை வாணி போஜன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் அறிமுகமானாலும் தற்போது வெள்ளித்திரையில் ஓரளவுக்கு பெயர் சொல்லும் நடிகையாக கலக்கி வருகிறார்.
அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை சைவசம் வைத்திருக்கும் வாணி போஜன் பற்றி கோடம்பாக்கத்தில் கிசுகிசு காட்டுத்தீ போல பரவி வருகிறது
நடிகை வாணி போஜன்
பிரபலமான சீரியலில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் எடுத்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த கதாபாத்திரமும் அமையவில்லை.

வெப் தொடர் குயின்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படத்தில் இருந்து வாணி போஜன் நடித்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது. இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, இணையத் தொடரின் குயினாகவே இவர் மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு Lock Up, Malaysia to Amnesia,ட்ரிபிள்ஸ், இரு துருவம் 2, செங்களம் என அடுத்தடுத்து வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

செங்களம்
அண்மையில் ஜீ5 ஓடிடியில் வெளியான செங்களம் இணையத் தொடரில் வாணி போஜன் அரசியல் கட்சியின் தலைவியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் கலையரசன், வாணி போஜன்,டேனியல், விஜி சந்திரசேகர் என பலரும் நடித்துள்ளனர். இத்தொடரில் சூர்யகலாவாக நடித்த வாணி போஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவருடன் ரிலேஷன்ஷிப்பா
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜன், நானும் நடிகர் ஜெய்யும் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. நானும் ஜெய்யும் ட்ரிபிள்ஸ் வெப் தொடரில் இணைந்து நடித்தோம் அதற்காக இப்படி செய்தியை பரப்பலாமா? ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப் என்று சொல்லி இருந்தால் கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.

ரொம்ப சீப்பான விஷயம்
ஆனால் லிவிங் டூ கெதரில் இருக்கேன் என்று பேசியது தான் வருத்தமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு லோன்போட்டு வீடு கட்டி இருக்கேன் அந்த வீட்டில் இல்லாமல், யாரோ ஒருத்தரோட வீட்ல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்றது ரொம்ப சீப்பான விஷயமா தெரிகிறது என நடிவை வாணி போஜன் டென்ஷனாக பேசினார்.