வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் அமோகமான ஓபனிங்கை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் வெற்றிமாறன் தனது ஸ்டைலில் சற்றும் பிசாகாமல் அட்டகாசமாக ‘விடுதலை’ படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘விடுதலை’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் சமூக கருத்துள்ள படங்களை பிரச்சார நெடியில்லாமல் இயக்கி வருபவர் வெற்றிமாறன். கடைசியாக இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ படம் பஞ்சமி நில விவகாரம் குறித்து பேசி, அதற்கான விவாதங்களையும் கிளப்பியது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘விடுதலை’ படத்தை கையிலெடுத்தார் வெற்றிமாறன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதுவும் தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வரும் சூரியை லீட் ரோலில் வைத்து வெற்றிமாறன் படம் இயக்க போகிறார் என்றதும் கோலிவுட் வட்டாரமே பரபரப்பாகியது. ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை மையமாக வைத்து தனது ‘விசாரணை’ படம் போலவே விடுதலையை இயக்கியுள்ளார். காவல் துறையின் அராஜக போக்கு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து சமரசம் இல்லாமல் பேசி பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.
அத்துடன் தனது முதல் படத்திலே ஹீரோவாக தன்னை சூரி நிலை நிறுத்திவிட்டதாக பலரும் பாராட்டி தள்ளி வருகின்றனர். அப்பாவியான போலீஸ் கான்ஸ்டபிள் குணசேகரன் கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாத நடிப்பை தந்து கவனம் ஈர்த்துள்ளார் சூரி. அந்தளவிற்கு வெற்றிமாறனும் அவரது கதாபாத்திரத்தை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியுள்ளார்.
Rajinikanth: தலைவரின் அடுத்த பட லுக்.. வெறித்தனமா இருக்கே: தீயாய் பரவும் போட்டோஸ்.!
மேலும் சில காட்சிகளே வந்தாலும் வாத்தியாராக மிரட்டிய விஜய் சேதுபதி, ஹீரோவுடன் டூயட் பாடுவதோடு மட்டுமில்லாமல் அழுத்தமான நடிப்பை தந்துள்ள பவானி ஸ்ரீ என அனைத்து கேரக்டரும் தனித்தனியாக பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். குறிப்பாக ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சேத்தன் ஆகியோரின் கதாபாத்திர தேர்வு கச்சிதமாக பொருந்தி போயுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச தரத்தில்.. ‘விடுதலை’ படத்தை இன்ச் பை இன்ச்சாக பாராட்டி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.!
இந்நிலையில் விமர்சகர்களின் பாராட்டு மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘விடுதலை’ படத்தின் முதல்நாள் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாளில் தமிழ் நாட்டில் 8 கோடி வரை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்புவின் ‘பத்து தல’ மற்றும் தசரா பட ரிலீசுக்கு மத்தியில் 8 கோடியை அள்ளியுள்ளது வெற்றிமாறனின் ‘விடுதலை’. மேலும் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.