சென்னை: துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் எந்தவொரு பெரிய கிளாஷும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த வாரம் வியாழக்கிழமை கவுதம் கார்த்திக், சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் வெள்ளிக்கிழமை சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை ஆகிய இரு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி உள்ளன.
பத்து தல திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
விடுதலை படத்தின் வசூல் நிலவரத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
தமிழ் சினிமாவின் பெருமை
கமர்ஷியல் படங்களுக்கு நடுவே சில கலை படைப்புகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன. இயக்குநர் வெற்றிமாறனே தனது படங்கள் எல்லாமே கமர்ஷியல் படம் தான் என்று சொன்னாலும், அதில் ஒரு கலைப் படைப்பை கொடுத்து விட தவறுவதில்லை. இந்நிலையில், நேற்று வெளியான விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
பத்து தல வசூல்
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. முதல் நாளில் படம் உலகம் முழுக்க 12 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குடும்ப ரசிகர்கள் குறைவு
பத்து தல திரைப்படம் யுஏ சான்றிதழ் படம் என்பதால் பலரும் குடும்பத்துடன் குறிப்பாக பெண்கள் கூட்டம் சிம்பு ரசிகைகள் முதல் நாளே படத்தை பார்த்து கொண்டாடினார்கள். ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படம் ஏ சான்றிதழ் படம் என்பதால் குடும்ப ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. மாறாக இளம் ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்தது.
விடுதலை வசூல் எவ்வளவு
சிம்புவுக்கும் இருக்கும் ஃபேன் பேஸ் பக்கம் விடுதலை படம் முதல் நாளில் பெரிதாக நிற்கக் கூட முடியவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வாரம்
விடுதலை படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பாராட்டுக்கள் மற்றும் மவுத் டாக் இருப்பதால் சனி மற்றும் ஞாயிறு படம் பிக்கப் ஆகும் என தெரிகிறது. ஆனால், வசூல் ரீதியாக கமர்ஷியல் படமான பத்து தல படத்தின் வசூலை விடுதலை முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.