Viduthalai Review: 'அவருக்கு' தேசிய விருது காத்திருக்கிறது… விடுதலை படம் குறித்து பயில்வான் விமர்சனம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பாராட்டுக்களை குவித்து வரும் விடுதலை படம் குறித்த தனது விமர்சனத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்துள்ளார்.

விடுதலைவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் விடுதலை. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விடுதலை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ​ Vignesh Shivan: அப்ப அப்ப பண்ணுங்க… ஹேக்கருக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்!​
பயில்வான் ரங்கநாதன்அதில் அவர் கூறியிருப்பதாவது, விடுதலை படத்தின் ஆரம்பமே ரயில் விபத்துதான். அது நிஜமான ரயில் விபத்து, கிராஃபிக்ஸ் இல்லை. அந்த விபத்தை ரத்தக் களரியுடன் கோரமாக காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். அந்த விபத்து மனசை கசக்கி பிழிந்து விடுகிறது. மக்கள் படை என்ற அமைப்பு ரயில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ரயிலை கவிழ்த்தவர்கள் தர்மபுரி மலைப்பகுதியில் பதுங்கியிருக்கிறார்கள்.
​ ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்ற பவானிஸ்ரீ!​
அப்பாவி போலீஸ்காரர்அவர்களை பிடிக்க ஒரு பட்டாளியன் குழு செல்கிறார்கள்.
அதில் ஒரு போலீஸ்காரரும் போகிறார், அவர் தான் சூரி. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சூரிக்கு அம்மா மட்டும்தான் உள்ளார். ரொம்பவும் அப்பாவியான ஒரு போலீஸ்காரர். தீவிரவாதிகளை பிடிக்க பஸ்ஸை சோதனை செய்கிறார்கள். அப்போது கூட தான் ஒரு போலீஸ் என்று சொல்ல தெரியவில்லை, அந்தளவுக்கு வெள்ளந்தியான போலீஸ்காரராக உள்ளார் சூரி.
​ Vijay: அங்கிள் வரமாட்டீங்களானு கேட்ட குழந்தை… உடனே வீடியோ காலில் வந்து கொஞ்சிய விஜய்!​
சர்வாதிகாரி சேத்தன்போலீஸ் உயர் அதிகாரியாக சேத்தன் நடித்துள்ளார். சர்வாதிகாரியாக உள்ளார் சோத்தன். அடிக்கடி சூரிக்கு பனீஷ்மெண்ட் கிடைக்கிறது. இரக்க குணம் கொண்ட சூரி அங்குள்ள மலைவாழ் பெண்ணுக்கு உதவி செய்கிறார். பின்னர் காதல் மலருகிறது. அந்த மலை வாழ் மக்களுக்கு வாத்தியாராக விஜய் சேதுபதி உள்ளார். வன்முறை செய்யும் போலீஸ்காரர்களுக்கு வன்முறையிலேயே பதில் கொடுக்க வேண்டும் என்கிறார். Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!​
சூரியின் வாழ்க்கைசூரி நிஜமாவே கடினமாக உழைத்துள்ளார். உண்மையாகவே ஓட்டு வீடுகள் கட்டடம் என தாவி இருக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்பது போல உடலை வறுத்தியிருக்கிறார் சூரி. சூரி இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்ற சொல்ல முடியாது, அவருடைய வாழ்க்கையே இந்தப் படம்தான். அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்துள்ளார்.
​ Shruti Haasan: காதலருடனான அந்தரங்க போட்டோவை ஷேர் செய்த ஸ்ருதி ஹாசன்!​
தேசிய விருது கன்ஃபார்ம்விஜய் சேதுபதி வன்முறைக்கு வன்முறைதான் பதில் என்ற புரட்சியாளராக உள்ளார். புதுமுகம் ஹீரோயின் நன்றாக நடித்திருக்கிறார். சேத்தன் போலீஸ் அதிகாரியாக
கொடூரமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் ரீஎன்ட்ரிதான். அலுத்துக்காமல் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு சூப்பர். கால்பதிக்க முடியாத இடத்தில் எல்லாம் அவருடைய கேமரா பதிந்துள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது மற்றும் தமிழக அரசின் விருது அவருக்காக காத்திருக்கிறது.
​ Viduthalai Review: இந்திய சினிமா கண்டிராத ஒன்று… விமர்சகர்களின் பாராட்டு மழையில் விடுதலை!​
இளையராஜா இளையராஜாதான்..இசையை பொருத்தவரை இளையராஜா இளையராஜாதான். 3 பாட்டு போட்டுள்ளார். மூன்றுமே அட்டகாசம். யாரும் அவர்கிட்ட நெருங்க முடியாது. காதுல தேன் பாய்ந்தது போல் உள்ளது அவருடைய இசை. வன்முறைக்கு வன்முறைதான் என்கிறது விடுதலை திரைப்படம். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது என் கருத்து. இது காந்திய தேசம், அகிம்சைதான்.
மலைவாழ் மக்கள் ரோடு வேண்டாம் என்கிறார்கள். அதற்கு காரணம் சாலை வசதி செய்து கொடுத்து அங்குள்ள வளத்தை சுரண்டி விடுவார்கள் என்பதால்.
​ தொடரும் துரோகங்கள்.. அசராத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
சிந்திக்க வைக்கும் படம்கவுதம் மேனன் நியாயமான போலீஸ் அதிகாரியாகவும், அரசாங்கத்தின் ஏவலாளியாகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கேரக்டருக்கு உயிர் ஊட்டியிருக்கிறார் கவுதம் மேனன். இயக்குநர் வெற்றிமாறன் தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்கிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. வன்முறை என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி இருவருக்கும் பாதிப்புதான். வெற்றிமாறன் விடுதலை படத்தில் பச்சையாக தீவிரவாதத்தை ஆதரித்துள்ளார் என்று தோன்றுகிறது. விடுதலை படத்தில் விறுவிறுப்பு இல்லை, குடும்பத்தோடு பார்க்க முடியாது. பொறுமையாக செல்கிறது. பொழுது போக்கை எதிர்பார்த்து சென்றால் இருக்காது. விடுதலை பொழுதுபோக்கு படம் அல்ல சிந்திக்க வைக்கும் படம், இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
​ Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!​
Viduthalai Bayilvan Ranganathan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.