இத்தாலியில் ஆங்கிலத்தை பயன்படுத்த தடை?

ரோம்,

அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.

“இத்தாலி நாட்டு மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பின் போது ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் பயன்படுத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் 100,000 யூரோ (சுமார் 90 லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்” என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி. மீதி பயன்படுத்துவோருக்கு ரூ.89 லட்சம் அபராத விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மசோதா இன்னும் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இரு கட்சிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு ஆமோதித்த பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும். அப்படி அமல்படுத்தப்படும் பட்சத்தில், நிர்வாக ரீதியான பயன்பாடுகள் மட்டுமல்லாது, நிறுவன பெயர்கள், குறுஞ்ச்சொற்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், தினசரி பேச்சுமொழி உட்பட அனைத்திலிருந்தும் ஆங்கிலம் அகற்றப்படவேண்டியதாக இருக்கும்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.