சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழந்த நிலையில், உடனடியாக மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்து உள்ளனர்.
சேலம் மாவட்டம் : ஆத்தூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த 9ம் வகுப்பு மாணவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நரசிங்கபுரம் ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – சித்ரா தம்பதியரின் மகனான சம்ரீஷ், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, வாழப்பாடி நோக்கி சேலம்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த பிக்கப் சரக்கு வாகனம் சம்ரீஷ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர்.
ஆனால், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.