உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி… இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி


துருக்கியில் தம்பதி ஒன்று ஆண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்து, அந்த நபரின் ஆணுறுப்பை துண்டித்து, கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி

தொடர்புடைய நபரின் சடலத்தை பூங்கா ஒன்றில் மறைவு செய்ய முயன்ற அந்த தம்பதி பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
துருக்கியின் அண்டலியா மாகாணத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி... இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி | Man Stabbed Brutal Murder During Threesome

Image: Newsflash

Elvan Kucukaltun மற்றும் Nadja Angela Grosser என்ற தம்பதி Kadir Demir என்ற நபரை தங்களுடன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளது.
ஆனால் திடீரென்று ஏற்பட்ட கருத்து மோதல், வன்முறையாக மாறியுள்ளது.

Kadir Demir-ஐ அந்த தம்பதி கொடூரமாக தாக்கி, அவரது ஆணுறுப்பை துண்டித்துள்ளது. மேலும், கத்தியால் 54 முறை தாக்கி, கொடூரமாக கொலை செய்துள்ளது.
இந்த வழக்கில் சிக்கிய Elvan Kucukaltun மற்றும் Nadja Angela Grosser என்ற தம்பதிக்கு இந்த வாரம் குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2022 ஜனவரி மாதம் Kucukaltun என்பவர் தமது ஜேர்மன் காதலியுடன் உல்லாசமாக இருக்கும் பொருட்டு, இருவருக்கும் நன்கு அறிமுகமான Kadir Demir-ஐ அழைத்துள்ளனர்.

முதலில் மது அருந்திய மூவரும் பின்னர் நெருக்கமாக இருந்த நிலையில், Kucukaltun மற்றும் Grosser இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருகட்டத்தில் கத்தியால் தாக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

ரோந்து பொலிசாரிடம் சிக்கிய நபர்

முதலில் Demir மார்பில் கத்தியால் குத்திய Kucukaltun அவரது ஆணுறுப்பையும் துண்டித்துள்ளார்.
இந்த நிலையில் Kadir Demir சடலத்தை மறைவு செய்ய அருகாமையில் உள்ள பூங்காவுக்கு சென்ற Kucukaltun ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி... இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி | Man Stabbed Brutal Murder During Threesome

Image: Newsflash

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது ஜேர்மானியரான Nadja Angela Grosser என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் Kucukaltun என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியை பொறுத்தமட்டில் ஆயுள் தண்டனை என்பது 24 ஆண்டுகள் என கூறப்படுகிறது. மேலும், முதல் நிலை கோலை குற்றவாளிக்கு பிணையும் வழங்கப்படுவதில்லை.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.