பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட காரணமான BMW சாரதியை பொலிசார் தீவிரமாக தேடி வருகிஒன்றனர்.
விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்
தொடர்புடைய கர்ப்பிணி பெண் தமது டொயோட்டா வாகனத்தில் சோலிஹல் பகுதியில் சென்றுகொண்ட்ருக்கும் போது தான் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.
இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான இந்த விபத்து தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தற்போது முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதாவது அந்த BMW வாகனத்தை செலுத்திய சாரதியின் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
மட்டுமின்றி, அதே BMW வாகனத்தில் பயணித்ததாக 18 வயது இளைஞர் ஒருவரை, வாகன திருட்டு வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
Credit: West Midlands Police
மேலும், முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞரை பொலிசார் பிணையில் விடுவித்துள்ளனர்.
அந்த கர்ப்பிணி பெண்ணின் மொத்த குடும்பத்டையும் உலுக்கிய சம்பவம், அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது என விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மறக்க முடியாத நாளாக…
இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், தங்களின் விசாரணை தொடர்வதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய சாரதி உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு விளக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, அந்த சாரதி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.