கடலோரம் விளைந்த ஒரு பலா பழம் கர்நாடகாவில் ரூ.4 லட்சத்திற்கு விற்பக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூருவில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ட்வாலில் ஏலம் நடைபெற்றது. அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களான அஜீஸ் மற்றும் லத்தீஃப் இடையே கடுமையான போட்டிக்குப் பிறகு பழங்கள் விற்கப்பட்டன.
இறுதியாக ஒரு பலாப்பழம் ரூ.4.33 லட்சத்துக்கு விற்கப்பட்டதை அறிந்து மக்கள் ஆச்சரியமடைந்தனர்.காய்கறிகளை தவிர, மசூதியில் வழங்கப்படும் பல பொருட்களும் அதிக விலைக்கு ஏலம் சென்றன.
மொத்த வசூல் தொகை அங்குள்ள மசூதியின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்காக நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பலா பழம் கடலோர பகுதியில் விளைந்ததால் இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிகிறது.
பலாப்பழம் உணவு என்பதை தாண்டி தற்போது பலருக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, பலாப்பழத்தைப் பயன்படுத்தி 400க்கு மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டது.
பலாப்பழம் பர்கர் பஜ்ஜி, வரமிளகாய், பாயாசம் கலவை, பலாப்பழம் மற்றும் பலாப்பழ விதை மாவு மற்றும் சாக்லேட்டுகள் போன்ற மிக நீண்ட பட்டியல் கொண்டு பொருள்களை இங்கு தயாரிக்கின்றனர்.
newstm.in