அதிமுகவின் பொதுச் செயலாளராக உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில்
அமர்ந்துவிட்டார். இவரை எதிர்த்து
தொடர்ந்த வழக்குகளில் எந்த ஒரு சாதகமான தீர்ப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் சட்டப் போராட்டத்தை விடுவதாக இல்லை. இப்படியே போனால்… இதுக்கே ஒரு எண்டே இல்லையா சார்? என்ற கேள்வி தான் எழுகிறது.
அரசியல் எதிர்காலம்
பொதுவாக அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது நீதிமன்றங்கள் இல்லை எனச் சொல்லப்படுவது உண்டு. ஒரு இடைக்கால நிவாரணமாக சில உத்தரவுகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் கட்சிக்கான அங்கீகாரம் என்பதை மக்கள் மன்றத்தில் தான் பெற முடியும். இதைத்தான் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அரசியல் விமர்சகர்கள் தங்கள் விவாதங்களில் தொடர்ந்து முன்வைத்து கொண்டிருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்
இருப்பினும் தனக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற முடிவில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக இருப்பதை பார்க்க முடிகிறது. மற்றொரு விஷயமும் முன்வைக்கப்படுகிறது. அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்ற நிலை வந்தால் உடனே தனிக்கட்சிக்கான முடிவை நோக்கி நகர்ந்து விட வேண்டும்.
மாற்று அணி
டிடிவி தினகரன்,
மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து பலமான கூட்டணி ஒன்றை அமைத்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை ஓ.பன்னீர்செல்வம் நிரூபித்து காட்டலாம். அதுவே அவரது அரசியல் எதிர்காலமாக அமைந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பாரா? இல்லை அதிமுகவிற்காக தொடர்ந்து மல்லுக்கட்டுவாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வி தொக்கி நிற்கிறது.
அமித் ஷா அழைப்பு
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி மூலம் அழைத்து பேசியிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில், கூடிய சீக்கிரம் அதிமுகவின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளாராம். இந்த விஷயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தனி அணியில் ஓபிஎஸ்
ஏனெனில் பாஜகவை நம்பி தான் தனி அணியாக ஓபிஎஸ் நின்றார். நீதிமன்றம் கைவிட்டு வரும் சூழலிலும் டெல்லி ஏதாவது ஒரு வகையில் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார். இத்தகைய சூழலில் அமித் ஷாவின் பேச்சு ஓபிஎஸ் கனவில் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
ஓபிஎஸ் அடுத்து தன்னை நிரூபிக்க முக்கியமான வாய்ப்பாக இருப்பது 2024 மக்களவை தேர்தல். இதற்கு சரியான வியூகம் அமைத்து போட்டியிட தயாராக வேண்டும். இந்த விஷயத்தில் விசுவாசமான நபர்கள் முன்வருவார்களா? என்பதும் முக்கியமானது. ஏனெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் என்ற நபரை களமிறக்கினார்.
ஆனால் மாவட்ட தலைமை ஓபிஎஸ்க்கு எதிராக திரும்பியது. கடைசியில் வேட்பாளரை திரும்ப பெற்றதும் அந்த நபர் எடப்பாடி பக்கம் தாவிவிட்டார். இதுபோன்ற சிக்கலையும் சமாளிக்கும் வகையில் அடுத்தகட்ட நகர்வை ஓபிஎஸ் முன்னெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.