சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தின் 14-வது மாடி மேல்தளத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அரைமணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதை தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.