திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சார இரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் (ஏப்ரல் 1 )செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயணம் நேரம் அதிகரிக்க பட்டு இன்று அமலுக்கு வந்துள்ளது.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து திருச்செந்தூர்– நெல்லை இடையே டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கபட்டு வந்த இரயில்கள் , திருச்செந்தூர்- சென்னை வரை மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப் படும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. குறிப்பாக, இரவு 7.10 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படுவதற்கு பதிலாக இன்று இரவு 8.10 மணிக்கு மின்சார எஞ்சின் மூலம் புறப்பட்டு ஒரு மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் வேகப்படுத்தபட்டு சரியாக 8.10 மணியளவில்திருச்செந்தூரில் இருந்து 18 பெட்டிகள் அடங்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் புறப்பட்டு சென்றது.
இந்த மின்சார சேவை இரயிலானது திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இதுவரை டீசல் மூலம் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இரயில்கள் தற்போது மின்சார எஞ்சின் மூலம் இயக்கபட்டுள்ளது பயணிகளிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நாளினை கொண்டாடிடும் விதமாக இரயில்வே வளர்ச்சி துறை சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுவாக ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு முருகனை வழிபடுவதற்கு அதிக படியான பக்தர்கள் இரயில்கள் மூலம் வருகை தருவர்.. தற்போது மின்சார எஞ்சின் மூலம் இயக்கப் படும் இரயிலின் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருச்செந்தூருக்கு அதிக படியான பக்தர்கள் இரயில்கள் மூலம் வந்து செல்வதால் திருச்செந்தூர் இரயில் களில் 18 பெட்டிகள் மட்டுமே கொண்ட இரயில்கள் உள்ளதால் வந்து செல்ல கூடிய பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் எனவே இரயில்களில் மேலும் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இரயில்களை இயக்க வேண்டும் என்றும் ,திருச்செநதூரில் இருந்து சென்னைக்கு நேர்வழியில் ஒரு இரயிலை மேலும் இயக்க வேண்டும் எனவும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.