வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதிய பார்லிமென்ட் கட்டடம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த வளாகத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மூலிகை தோட்டத்தை அமைத்து வருகிறார். இங்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மூலிகை செடிகள் நடப்பட்டு, அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையில், மறைந்த அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு மூலிகை தோட்டத்தை அமைத்தார். இதே போல புதிய பார்லி., வளாகத்திலும் சபாநாயகர் மூலிகை தோட்டத்தை அமைத்துள்ளார்.
![]() |
ஒரு நாள், திடீரென பிரதமர் மோடி, சபாநாயகர் மற்றும் அனைத்து கட்சிகளின் பார்லிமென்ட் தலைவர்கள் புதிய பார்லி., வளாகத்திற்கு வந்தனர். அப்போது ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் ஒரு மூலிகை செடியை தந்து அவர்களை நடுமாறு சொன்னார் சபாநாயகர்.
தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும், புதிய பார்லி., வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டனர். இங்கு, கேரளாவிலிருந்து அதிகளவில் மூலிகை செடிகள் எடுத்து வரப்பட்டு நடப்பட்டுள்ளதாம்.
சிவனுக்கு உகந்த ருத்ராட்ச செடியை, பிரதமர் மோடி தன் கையால் நட்டாராம். இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த மூலிகை தோட்டம் பெரிதாகி மணம் வீசும் என்கிறார் ஓம் பிர்லா.
Advertisement