மதுரை | மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை: மதுரையில் மூளைச்சாவு அடைந்த சமயநல்லூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.

மதுரை சமயநல்லூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா (47). இவரது கணவர் செபாஸ்டின், சில ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் கார்த்திகா வசித்து வந்தார்.

இந்நிலையில் மார்ச் 30ம் தேதி வேலை பார்க்கும் இடத்திற்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தேனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த விபத்தில் கார்த்திகா பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்று நள்ளிரவு கார்த்திகா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ஒப்புதலின் பேரில் கார்த்திகாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து அவரது கல்லீரல், கண், சிறுநீரகம், நுரையீரல், இருதயம் ஆகிய உறுப்புகள் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு தானம் அளிக்கப்பட்டன.

கார்த்திகாவின் உடல் உறுப்புகள் சாலை வழியாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டன. ஆம்புலன்ஸ்கள் எளிதாக செல்வதற்கு ஏற்ப காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி உதவினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.