வாய் கிழிய ஏழைகள் தொழிலாளர்கள் சமத்துவம் பேசும் பொதுவுடமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்..!!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசால் கீழடி அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70000 பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட நேற்று வந்திருந்தனர். வழக்கமாக காலை 10 மணிக்கு திறக்கப்படும் அருங்காட்சியகமானது சூர்யாவின் குடும்பத்தினரின் வருகைக்காக காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது.
வழக்கமான நேரத்தில் அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்த பொதுமக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியகத்தில் உள்ளே இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவதிக்கு ஆளாகினர்.
இதற்கு பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் “சிவகங்கை மாவட்டம், கீழடியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைககளை பார்வையிட அனுமதிக்காமல் நடிகர் சூர்யா குடும்பத்திற்காக கொளுத்தும் வெயிலில் தொல்லியல் துறை கீழடி அருங்காட்சியத்திற்குள் காத்திருக்க வைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாய் கிழிய ஏழைகள் தொழிலாளர்கள் சமத்துவம் என்று பேசும் பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் திரைப்பட நடிகர் சூர்யா குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்களையும் பள்ளி சிறுவர்களையும்பார்வையிட அனுமதிக்காமல் அவமதித்துள்ளார். இதுதான் பொதுவுடமை கட்சிகளின் இலட்சணமா? இதற்கு என்ன சொல்கிறார் எம்பி வெங்கடேசன்.
இச்சம்பவத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான கொடுஞ்செயல் ஆகும். எனவே இதில் தொடர்புடைய அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
கீழடியில் @Suriya_offl குடும்பத்திற்காக பொதுமக்களை வெயிலில் காக்க வைத்த @SuVe4Madurai – தலைவர் பெ.ஜான்பாண்டியன் கண்டனம். #MKStalin #actorsuriya #suvenkatesanMP #tamilagamakklmunnetrakalagam முழு அறிக்கை:https://t.co/SD67VOMNaq pic.twitter.com/8olrlZ44As
— John Pandian (@JohnPandianTMMK) April 2, 2023